திருநெல்வேலி -கால்நடை மருத்துவக் கல்லூரியில் சோலார் பொருத்தம்
திருநெல்வேலி ராமையன்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள கால்நடை வளர்ப்பு துறை கட்டிடத்தில் சூரிய ஒளி மூலம் 6.24 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் அமைப்பு பொருத்தப்பட்டு இன்று முதல் மின் உற்பத்தியை துவங்கியுள்ளது.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவக் கல்லூரியின் தலைவர் டாக்டர் செல்லப்பாண்டியன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கல்லூரியின் தலைமை பேராசிரியர் டாக்டர் எட்வின் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். நெல்லை சந்திப்பு யூனியன் பேங்க் ஆப் இந்தியா தலைமை அதிகாரி திருமதி நிதி மற்றும் டாட்டா சோலாரின் மார்க்கெட்டிங் நிர்வாகிகள் நிகில், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். பார்வதி பவர் சிஸ்டம் தலைமை நிர்வாக அதிகாரி ஈஸ்வர் ரங்கராஜ் சோலார் மின் உற்பத்தி குறித்து விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த சோலார் மின் உற்பத்தி மூலம் இந்த கால்நடை மருத்துவ கல்லூரி தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்ய முடியும்.
கருத்துக்கள்