advertisement

அரசு நிகழ்ச்சிக்கு வசூல் குறித்த மருத்துவர் ஆடியோ பற்றி விசாரணை: அமைச்சர் மா.சு பேட்டி

ஏப். 10, 2025 10:26 முற்பகல் |

 


அரசு நிகழ்ச்சிக்கு ரூ.10ஆயிரம் வசூல் செய்வதாக மருத்துவர் பேசிய ஆடியோ குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் துாத்துக்குடியில் தெரிவித்தார். 

தூத்துக்குடி விமான நிலையம் வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர், "தென்காசியில் சுகாதாரத்துறை நிகழ்ச்சிக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று மருத்துவர் ஒருவர் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது. அதனை நானும் கேட்டேன். பணம் வசூல் செய்து எந்த நிகழ்ச்சியும் நடத்துவது கிடையாது. வெளியான ஆடியோவில் இருக்கும் மருத்துவரின் குரல் யாருடைய குரல்? உண்மைதானா என்று விசாரிக்க சென்னையில் இருந்து ஒரு சுகாதாரத்துறை இணை இயக்குனரை அனுப்பியுள்ளேன். அவர் யார் என்று தெரிந்தால் இன்று மாலைக்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் 

தென்காசியில் நாளை நடக்க இருந்த நிகழ்ச்சியை பங்குனி உத்திரம் என்பதால் தான்  அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளேன் என்று தெரிவித்தார்

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement