பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : எஸ்டிபிஐ கூட்டத்தில் தீர்மானம்
எஸ்டிபிஐ கட்சியின் பாளை தொகுதி கூட்டம் தொகுதி அலுவலகத்தில் தொகுதி தலைவர் சலீம் தீன் தலைமையில் நடைபெற்றது.
தொகுதி பொருளாளர் கே.கே.காஜா வரவேற்புரை ஆற்றினார்.கூட்டத்தில் மேலப்பாளையம் மண்டலம் வார்டு பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,50 வது வார்டு பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கூடுதலாக குலோரின் கலப்பால் குடிநீர் எரிச்சல் ஏற்படுகிறது.52 வது வார்டு கரீம் நகர் தெருக்களில் மழை நீர் காரணமாக சகதி காடாக மாறி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர், போர்கால அடிப்படையில் சாலை அமைக்க வேண்டும், மேலப்பாளையம் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் வக்பு எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணை தலைவர் ஜவுளி காதர், துணை செயலாளர் மூசா காஜா கலந்து கொண்டனர் இறுதியாக தொகுதி துணை தலைவர் ஜவுளி காதர் நன்றியுரை ஆற்றினார்.
கருத்துக்கள்