advertisement

பரமக்குடியில் மத்திய அரசை கண்டித்து இ கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம் .

ஏப். 10, 2025 8:38 முற்பகல் |

 

வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி காந்தி சிலை முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் என்.எஸ். பெருமாள் தலைமை தாங்கினார்.மாவட்ட நிரவாக குழு உறுப்பினர் என்.கே.ராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் செ.செல்வராஜ்,நகர் செயலாளர் கே.ஆர்.சுப்பிர மணியன் துணை செயலாளர் எம் கோட்டைச் சாமி ஹரிகரன் கூட்டுறவு சங்க தலைவர் ருக்கு மாங்கதன் போக்குவரத்து கழக ரமேஷ் பாபு - பாஸ்கரன். நெசவாளர் சங்க நாகநாதன் - சிவக்குமார் உள்பட திரளாக கலந்து கொண்டு,ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே தேர்தல் நிலைபாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக சட்ட திருத்தம் கொண்டு வந்ததை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும்,பெட்ரோல் - டீசல் - எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் சாதாரண ஏழை - எளிய மக்களுடைய இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுவதை கண்டித்து கோஷங்கலிட்டு ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி பேசினர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement