advertisement

கடலூர் - அரசு-தனியார் பேருந்துகள்மோதி விபத்து - 30 பேர் படுகாயம்.!

ஏப். 10, 2025 9:16 முற்பகல் |

 

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் முப்பது பயணிகள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்று சென்னையில் இருந்து நாகை நோக்கி விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று அரசு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு பேருந்திலும் பயணம் செய்த சுமார் 30 பயணிகள் காயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement