advertisement

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை - ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

ஏப். 04, 2025 8:08 முற்பகல் |

பிரதமர் மோடி 06-ந் தேதி ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்படுகிறதென ராமநாதபுரம் ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :பாரதப் பிரதமர் மோடி வரும் 06-ந் தேதி (ஞாயிறு) ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைப்பதையொட்டி,பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளில் 06-ந் தேதியன்று (ஞாயிறு) ட்ரோன்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement