தூத்துக்குடியில் தொடரும் வழக்கறிஞர்கள் ஸ்ட்ரைக்
ஏப். 04, 2025 5:52 முற்பகல் |
தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று ( ஏப் 4) 3வது நாளாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன், மற்றும் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வருகின்றனர். நேற்று கண்டன ஆர்ப்பாட்டடம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று 3வது நாளாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை எதுவும் நடைபெறவில்லை.
கருத்துக்கள்