தூத்துக்குடியில் ரவுண்டானா பணிகளை மேயர் ஆய்வு
ஏப். 04, 2025 6:33 முற்பகல் |
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியிலுள்ள சந்திப்பில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் மாநகர மக்கள் மண்டல முகாமில் ரவுண்டானா அமைத்துத் தருமாறு மக்கள் அளித்த கோரிக்கையினை தொடர்ந்து அந்த இடத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ரவுண்டானா அமைய இருப்பதால் அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்றார்.
கருத்துக்கள்