advertisement

வேலூர் : பாதுகாப்பு கேட்டு எஸ்பி., அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

ஏப். 04, 2025 7:00 முற்பகல் |

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு  காதல் ஜோடி ஒன்று தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா மகமதுபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் ( 25) மற்றும் ஷாலினி ( 22) ரஞ்சித்குமார் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். 

இந்த நிலையில் ரஞ்சித்குமாரும், ஷாலினியும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர் ஷாலினியின் குடும்பத்தினருக்கு காதல் விவகாரம் தெரிய வந்தது தொடர்ந்து அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் ஷாலினிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்த்தனர்இதனால் ஷாலினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தொடர்ந்து இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர் இந்த நிலையில் பெண்ணின் தரப்பினர் ரஞ்சித் குமாருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது
தொடர்ந்து அவர்கள்  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement