உத்தரகோசமங்கை சிவன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
திருஉத்தரகோசமங்கை ஸ்ரீ மங்களேஸ்வரி - ஸ்ரீ மங்களநாத சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற்றது. பக்தர்கள், ஓம் நவச்சிவாய ... ஓம் நவச்சிவாய... நமோக... என பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்தரகோசமங்கையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சிவன் ஸ்தலங்களில் முதன்மை பெற்ற ஸ்ரீ மங்களேஸ்வரி - ஸ்ரீ மங்களநாத சுவாமி கோவிலில் நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு.கடந்த 01-ந் தேதி (ஞாயிறு) காலை யாகசாலை பூஜை ஆரம்பிக்கப்பட்டது.
பூஜையில், காசி ,கங்கை, காவேரி, யமுனை, பிரம்மபுத்திரா, வைகை உள்பட பற்பல புண்ணிய தீர்த்த குடங்களுக்கு 04-ந் தேதி (புதன்) அதிகாலை வரை சிறப்பு பூஜைகளும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றது.
மேலும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இங்கு அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற மரகதலிங்க நடராஜர் சிலைக்கு ஆண்டுக்கு ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசனத்திற்காக சந்தனம் கலையப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தருவது போன்று, கடந்த 01-ந் தேதி (ஞாயிறு) இரவு சந்தனம் கலையப்பட்டு 04-ந் தேதி (புதன்) இரவு வரை பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார். தொடர்ந்து,04-ந் தேதி காலை புண்ணிய தீர்த்த குடங்கள் இராஜ கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களும் கொண்டு செல்லப்பட்டு, கருட பகவான்கள் கோபுரத்தை சுற்றி வானத்தில் வலம் வரவும் சரியாக 09.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற்றது.
அது சமயம், சங்குகள் ஊதியும், அங்கு கூடியிருந்த பல லட்சக்கணக்கான பெண்கள், ஆண்கள் பக்தர்கள் ஓம் நவச்சிவாய ... ஓம் நவச்சிவாய ... நமோக ... என விண்ணை பிளக்கும் அளவிற்கு கரகோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் கண்டு தரிசிக்கவும், மரகதலிங்க நடராஜரை கண்டு தரிசனம் செய்வதற்காகவும் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், பரமக்குடி , மதுரை, தூத்துக்குடி, ஈரோடு, விருதுநகர், சிவகங்கை, கோவை , சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலிருந்தும், பாண்டிச்சேரியிலிருந்தும் இருசக்கர வாகனம் ,கார், வேன் , மினிடோர், பேருந்து போன்ற வாகனங்களில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள், பக்தர்கள் என பல லட்சக்கணக்கானவர்கள் பெரும் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறநிலையத்துறையினரும், கோவில் நிர்வாகிகளும் சிறப்பாக செய்து இருந்தனர்.
கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் ஆக்ரோஷமாக கூறியதாவது :உலகப் பிரசித்தி பெற்ற பழமையான சிவன் ஆலயங்களில் முதன்மை பெற்ற திருஉத்தரகோசமங்கை மகா கும்பாபிஷேகத்தை காண தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், பாண்டிச்சேரியிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் அவரவர் தங்களது வாகனங்களில் வந்துள்ளோம். முறையான போக்குவரத்து வசதி இல்லாததால் வாகனங்கள் அனைத்தும் சுமார் 3 மணி நேரம் டிராபிக் ஜாம் ஏற்பட்டதுடன், ராமநாதபுரம், பரமக்குடி திரும்பி செல்வதற்கு பேருந்து இல்லாமல் சுட்டெரிக்கும் வெயிலில் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு மிகவும் அவஸ்தை பட்டு வரும் நிலைக்கு ஆளாக்கப்பட்டோம் என ஆக்ரோஷமாக கூறியதுடன்,வரும் காலங்களில்லாவது இது போன்ற நிலைமை ஏற்படாதவாறு சம்மந்தப்பட்ட துறையினர்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்