advertisement

தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஏப். 04, 2025 10:14 முற்பகல் |

 

தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவிலில் திருப்பணிகள் முறையாக நடக்கவில்லை என்றும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதால் முழுமையான பணிகள் நடந்த பின்னரே கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நேற்று நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணை செய்து கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ராமன் ஆஜரானார். 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான டி எஸ் ஆர். வேங்கட ரமணாவும் இந்த வழக்கில் ஆஜரானார். கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பணிகள் பூர்த்தியடைந்து யாகசாலை பூஜைகளும் துவக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தை தடை செய்வது சரியாக இருக்காது என்று வாதிடப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement