தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? சர்வாதிகாரம் நடக்கிறதா? எடப்பாடி பழனிசாமி காட்டம்
அ.தி.மு.க சட்டசபையிலிருந்து வெளி நடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சவுக்கு சங்கர் வழக்கு குறித்து பேசினார்.
அவர் பேசியாதாவது," 10 நாட்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் வீட்டில் 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி, அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றதுடன், பல பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். வீட்டுக்குள் மனிதக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவுகளை கொட்டியுள்ளனர்.
இதை வன்மையாக கண்டித்துள்ளோம்.இதுபோன்ற கீழ்த்தரமான சம்பவம் தமிழகத்தில் நடந்ததே இல்லை. இது கொடுமையின் உச்சம். இந்த சம்பவம் குறித்து நாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வந்ததோம். ஆனால் எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். ஆனால், அதனை தொடர்ந்து நிராகரித்தனர். அவை முன்னவர் இதனை பொருட்படுத்தவில்லை.நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்தாலும், சாதாரண வழக்கை போட்டு, அன்றைய தினம் மாலையே அவர்கள் ஜாமினில் வெளியே வந்து விட்டனர்.
ஒருவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி, மனிதக் கழிவை வீசி அசுத்தம் செய்தவர்கள் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. இங்கு ஆட்சி நடக்கிறதா? சர்வாதிகாரம் நடக்கிறதா? மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே, இதை கண்டுகொள்ளவில்லை எனில், சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாக்கும் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்