தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருட்டு
தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 3 பவுன் நகை திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர், குமரன் நகரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் மனைவி ரத்தினம்மாள் (64). இந்த தம்பதியர் கடந்த ஏப் 23ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர் சென்று விட்டனர். பின்னர் 1ஆம் தேதி ஊர் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் ரத்தினம்மாள் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், தூத்துக்குடி சுந்தரவேல் புரம் 9வது தெருவை சேர்ந்த முனியசாமி மகன் முருகன் என்ற கட்ட முருகன் (40) என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை மீட்டனர்.
கருத்துக்கள்