advertisement

பங்குனி உத்திரத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க இந்து முன்னணி கோரிக்கை!

ஏப். 03, 2025 5:46 முற்பகல் |

 

பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு வரும் ஏப்  11ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என இந்து முன்னணி  கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு இந்து முன்னணி  மாவட்ட செயலாளர்  கே.எஸ்.ராகவேந்திரா விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "இந்துக்களின் இறை வழிபாட்டில் சாஸ்தா கோவிலுக்கு சென்று சாஸ்தா சாமி வழிபாடு செய்வது முக்கியமாகும். தென் மாவட்டத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக சாஸ்தா கோவில்கள் இருப்பதால் இந்த முக்கிய வழிபாடு வருகின்ற 11.04.2025 அன்று வருகிறது. அதனால் அன்றைய தினம் உள்ளுர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement