தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
ஏப். 02, 2025 5:48 முற்பகல் |
தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் மற்றும் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் ஆகியோர் வழக்கறிஞர்கள் தொழிலுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் 782 வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று (ஏப்.2 ம் தேதி) மதியம் 1 மணிக்கு மீண்டும் பொதுக்குழு கூட்டம் சங்கத்தில் வைத்து தலைவர் தனசேகர் டேவிட் தலைமையில், செயலாளர் செல்வின் முன்னிலையில் நடைபெறும் என சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்