advertisement

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு

ஏப். 07, 2025 12:46 பிற்பகல் |

 

மத்திய அரசு கேஸ் சிலிண்டர் விலையை ரூ. 50 உயர்த்தியுள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை ரூ. 50 உயர்த்தி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விலை உயர்வு உஜ்வாலா திட்டத்தில் பயன் பெறுபவர்கள் மற்றும் பயன் பெறாதவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் என்றும், இந்த விலை உயர்வு நாளை காலை முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வின் மூலம், ரூ.818.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.868.50 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement