தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் கைது
ஏப். 08, 2025 3:47 முற்பகல் |
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் கைது செய்யப்பட்டார்
தஞ்சாவூர் அருகே கரந்தையை சேர்ந்த கணேசன், 65, தெருவில் விளையாடிய, 10 வயது சிறுமியை, தனியாக அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்ததால், பெற்றோர் விசாரித்தனர்.
சிறுமி தெரிவித்த தகவலையடுத்து, தஞ்சாவூர் மகளிர் போலீசில், பெற்றோர் புகார் அளித்தனர். கணேசனிடம் விசாரணை நடத்தியதில், சிறுமியிடம் அவர் அத்துமீறியது உறுதியானது. போக்சோ சட்டத்தின் கீழ், நேற்று கணேசனை போலீசார் கைது செய்தனர்.
கருத்துக்கள்