advertisement

ஏப் 20 ல் மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு அணி தேர்வு

ஏப். 16, 2025 10:00 முற்பகல் |

தமிழ்நாடு கிரி்க்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு ஏப் 20 ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள  செய்திகுறிப்பில்,தமிழ்நாடு கிரி்க்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு வரும் ஏப் 20 ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் 19 வயது அதாவது (01.09.2006) அன்றோ அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு வரும் 20.04.2025 ஞாயிறு அன்று தூத்துக்குடி மிளவிட்டானில் அமைந்துள்ள டிலைட் பப்ளிக் பள்ளி மைதானத்தில் வைத்து  மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கிறிஸ்பின் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்வில் கலந்துகொள்ளும் வீரர்கள் ( கிரிக்கெட் whites, விளையாட்டு உபகரணங்கள்) ஆதார் நகல் pdf, அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சய்ஸ் போட்டோ pdf, பிற்பபு சான்றிதழ் pdf வைத்துத்கொள்ள வேண்டும்.தேர்வாகும் வீரர்கள் அனைவருக்கும் சிறப்பான பயிற்சி அளிக்கப்படும். மேலும்
வரும் மே 2025 மாதம் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான  போட்டியில் கலந்து கொள்வார்கள், மேலும் விபரங்களுக்கு மாவட்ட செயலாளர் திரு J. கிறிஸ்பின் (8015621154) மாவட்ட இணைச்செயலாளர் சுப்பிரமணியன்( 8754004377) மற்றும் மாவட்ட துனைச்செயலாளர் சாமுவேல்ராஜ்(9944833333) ஆகியோரை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement