கேரளாவில் போலீசை பார்த்ததும் தப்பிய அஜீத் பட நடிகர்
ஏப். 18, 2025 10:22 முற்பகல் |
கேரளா மாநிலத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவு நேரத்தில் சோதனைக்குச் சென்றனர்.
அப்போது ஒருவர் ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதையறிந்த போலீசார் அவர் யார்? என்று விசாரணை நடத்திய போது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இவர் ஏன் போலீசாரை கண்டு தப்பி ஓடினார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்க முடிவு செய்து உள்ளனர்.
கருத்துக்கள்