advertisement

புனித வெள்ளி-கன்னியாகுமரி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள்

ஏப். 18, 2025 9:58 முற்பகல் |

 

புனித வெள்ளியை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று காலை சிறப்புப் பிரார்த்தனையும், சிலுவைப்பாதையும் நடைபெற்றது.

கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் மிக கனத்த நாள் புனித வெள்ளி இன்று (ஏப் 7) அனுசரிக்கப்படுகிறது. மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்திகளின்படி இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு தம் சீடர்களுடன் கடைசியாக உணவருந்திய நாளும் இந்த புனித வெள்ளி தான். இந்த நாள் பாஸ்கா என்றும் அழைக்கப்படுகிறது.

இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் ஞாயிற்றுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை இந்த புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இந்த புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் மற்றும் சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் உள்ள துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன் அனுபவித்த துன்பங்களை நினைவு கூறும் சிலுவைப் பாதை நிகழ்வு நடைபெற்றது..

ஆலயத்திலிருந்து பவனியாகத் தொடங்கிக் கதைக் களம் மாறாமல் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதா மலை வரை முழு நிகழ்வையும் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டினர். இந்த நிகழ்வை 100-க்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு, சிறப்புப் பிரார்த்தனை மற்றும் சிலுவைப் பாதை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement