தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்: மத்தியஅரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் டெல்லிக்கு என்றும் அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான் என்று கூறினார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அவருக்கு வழியெங்கும் பொது மக்களும், திமுகவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் வளர்ச்சியை எடுத்து கூறியதோடு, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், “சென்னை சுற்றுவட்டாரங்களில் தொழில்வளாகங்களை உருவாக்கியவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி. கண்ணாடி முதல் கார் வரை அனைத்து தொழில்களும் அவரது ஆட்சியில் தொடங்கப்பட்டன. கடந்த நான்கு ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.” என்றார்.
மத்திய அரசின் அணுகுமுறையைப்பற்றி அவர் கூறும் போது, “தமிழ்நாட்டை அடகு வைக்கவே சிலர் முயல்கிறார்கள். அமித் ஷா பதிலளிக்காமல் திசை திருப்பும் பேச்சுகள் செய்கிறார். இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைக்காகவும் தமிழ்நாடே போராடி வருகிறது. மாநில உரிமைகளுக்கான அகில இந்திய குரலாக திமுக தான் செயல்படுகிறது.” என்று கூறினார்.
“நாங்கள் கேட்பது அழுகையல்ல; உரிமை. மத்திய அரசு வைக்கும் தடைகளை சட்டபூர்வமாக உடைத்து முன்நோக்கி செல்வோம். அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு வர உழைத்துக் கொண்டிருக்கிறோம்.”மத்திய அரசின் அரசியல் யுக்திகள் தமிழகத்தில் செயல்படாது எனவும் அவர் தெளிவுபடுத்தினார். “கட்சிகளை உடைக்கும் ஃபார்முலா தமிழகத்தில் எடுபடாது. ரெய்டுகள், அச்சுறுத்தல்கள் என மற்ற மாநிலங்களில் முயற்சிக்கும் உங்களது செயல் தமிழ்நாட்டில் இயங்காது. எங்க தமிழ்நாடு, டெல்லிக்கு எப்போதும் அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்!” என்றார்.
கருத்துக்கள்