ராணிப்பேட்டை- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
வருவாய் துறை கிராம உதவியாளர் மற்றும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலை முறை ஊதியம் சட்பூர்வ ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம்,முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மூன்று அம்சம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது,எய்ட்ஸ் கட்டுப்பாடுத் திட்ட ஊழியர் மற்றும் கசநோய் தடுப்பு திட்ட ஒழிப்பு பணியாளர், தூய்மைக் காவலர்கள், மக்கள் நலபணியாளர் மற்றும் புற ஆதார ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் மேல்நிலைத்தொட்டி இயக்கும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் நிலையான ஊதியம் மற்றும் பணிக்கொடை ஓய்வூதியம் போன்றவற்றை தமிழக அரசு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரேம் ஆனந்த் தலைமை வகித்திருந்தார் ,மேலும் இதில் வாசுகி,வெங்கடாசலம், சுசீலா, லோகநாதன்,செல்வகுமார், ரவி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று இருந்தனர்.
கருத்துக்கள்