ஜோலார்பேட்டை : மாமியாரை பழிவாங்க மருமகள் செய்த நுாதன சம்பவம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் , கனகா தம்பதி . வயதான இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ஆறுமுகம் தாயின் வீட்டின் அருகே வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 31ம் தேதி சம்பவத்தன்று நள்ளிரவு மர்ம நபர் மூதாட்டி கனகாவின் முகத்தில் மிளகாய் பொடி தூவி துணியால் முகத்தை மூடி கட்டையால் சரமாரியாக தாக்கியதோடு அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். இதையடுத்து இந்த தாக்குதல், நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மூதாட்டி கனகாவின் மருமகள் வசந்தி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
மாமியாரை பழிவாங்க வசந்தி தனது மாமன் மகனை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.மேலும் மாமியார் கனகா மற்றும் மருமகள் வசந்திக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதனால் ஆத்திரமடைந்த வசந்தி தனது மாமியாரை பழி வாங்க வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார். சந்தியின் மாமன் மகனான மண்டலவாடி அடுத்த கவுண்டப்பனூர் பகுதியைச் சேர்ந்த மைக்கல்ராஜை இதற்கு பயன்படுத்தி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாமன் மகனை ஏவி மாமியாரை தாக்கிய மருமகள் வசந்தி,மாமன் மகன் மைக்கல்ராஜும் போலீசார் கைது செய்தனர்.
கருத்துக்கள்