வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு தூத்துக்குடி ஆட்சியர் மரியாதை!
ஏப். 16, 2025 9:21 முற்பகல் |
கவர்னகிரியில் சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது 255வது பிறந்த நாள் இன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் வீரன் சுந்தரலிங்கம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கருத்துக்கள்