advertisement

ஈரோட்டில் தேர்வு எழுதி மாயமான மாணவிகள் சமயபுரத்தில் மீட்பு

ஏப். 16, 2025 6:24 முற்பகல் |

தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிவிட்டு மாணவிகள் வெளியே வந்தனர். இதில் 5 மாணவிகள் வீடு திரும்பவில்லை.

ஆனால் 8 மணிக்கு மேலாகியும் மாணவிகள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரித்தனர். அங்கு மதியம் தேர்வு முடிந்ததும் அனைத்து மாணவிகளும் புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.

இதனால், பதற்றமடைந்த 5 மாணவிகளின் பெற்றோரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், பள்ளிக்கூடத்தில் இருந்து மாணவிகள் 5 பேரும் மதியம் 1.20 மணிக்கே வெளியேறியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.

இந்த நிலையில், மாயமான 5 மாணவிகளும் இன்று மீட்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தேர்வு எழுதிவிட்டு மாணவிகள் 5 பேரும் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று சாமி தரிசனம் செய்ய பெற்றோருக்கு தகவல் கொடுக்காமல் சென்றது தெரிய வந்துள்ளது.பின்னர், மாணவிகள் 5 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement