advertisement

கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது

ஏப். 08, 2025 3:03 முற்பகல் |

கோவில்பட்டியில் சுடுகாடு அருகே  வீட்டில் பதுக்கி வைத்து ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

கோவில்பட்டி மறவர் காலனி சுடுகாடு அருகே கருப்பசாமி என்பவர் வீட்டில் கடத்தலுக்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக வந்த தகவலை தொடர்ந்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு காவலர்கள் முத்துராமலிங்கம், அருணாச்சலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது  ரேஷன் அரிசியை  வாகனத்தில் ஏற்றி கொண்டிருப்பதை பார்த்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்த போது கருப்பசாமி என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

ரேஷன் அரிசி கடத்திக் கொண்டிருந்த புவனேஸ்வரன், செல்லத்துரை இருவரையும் கைது செய்த போலீசார்2 டன்ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர், இரண்டு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு தூத்துக்குடி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement