வங்கிகள் மூலம் ரூ.1 கோடி வரை கடன் -.திருவள்ளூர் ஆட்சியர் தகவல்!
முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் ரூ.1 கோடி வரை கடன் பெறலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வரின் காக்கும் கரங்கள்" திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் படைவீரர்,சார்ந்தோர் வயது வரம்பு இன்றி இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயனடையலாம். இதில் பல்வேறு தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் வழங்க வழிவகை செய்யப்படும்.
முன்னாள் படைவீரர், விதவையர் திருமணமாகாத மகன் 25 வயதுக்கு உட்பட்டராக இருந்தல் வேண்டும். 25 வயதுக்கு மேல் இருக்கும் மகன்கள் முன்னாள் படைவீரருடன் இணைந்து பங்குதாரர் ஆக தொழில் தொடங்கிடலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்,சார்ந்தோர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு திருவள்ளூர் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாக 044-29595311 தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
கருத்துக்கள்