advertisement

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஏப். 08, 2025 3:40 முற்பகல் |

 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து, தென்தமிழகம் வரை வளி மண்டல சுழற்சி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என வானிலை மையம் கணித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement