வாணியம்பாடி: பள்ளி காவலாளி படுகொலை சம்பவம்! பள்ளிக்கு விடுமுறை!
ஏப். 07, 2025 6:55 முற்பகல் |
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இக்பால் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்த இஃர்பான் என்ற நபர் (ஷாகிராபாத்), காலை வழக்கம்போல் பள்ளிக்குச் செல்லும் வழியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இஃர்பான் தனது மிதிவண்டியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, பின்வந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். தாக்குதலில் படுகாயமடைந்த இஃர்பான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்ததும், நகர காவல்துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை சம்பவத்தையடுத்து, பள்ளியில் பாதுகாப்பு காரணமாக இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்