விளாத்திகுளம் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கிராம மக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இளம் கல்லூரணி கிராமத்தில் குடிநீர் வசதி, தெருக்களில் பேவர் பிளாக் சாலை, கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது பற்றி கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இளம் கல்லூரணி கிராமம் வங்காள விரிகுடா கடல் அருகே உள்ள கிராமமாகும், இக்கிராமத்தில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முற்றிலும் கிடையாது. ஆகவே கிராம மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தரும்படி கோரிக்கையாக கூறிக்கொள்கிறோம்.
மேலும் வைப்பார் ஆற்று பாலம் அருகில் புதிய வட்டக் கிணறு அமைக்கப்பட்டு மற்றும் அதனைச் சார்ந்து புதிய பைப் லைன் அமைந்தும், மேலும் தற்போது உள்ள நடைமுறையிலிருக்கின்ற HT டேங்க் 10,000-விட்டர் கொள்னை 60,000-லிட்டர் கொள்ளலவாக அதிகரித்து HT டேங்க அமைப்பதோடு 10,000 லிட்டர் ஜம்பு ஒன்று அமைத்து கிராமமக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். மேலும், தெருக்களில் பேவர் பிளாக் சாலை, கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துக்கள்