advertisement

நெல்லை எப்எக்ஸ் கல்லுாரியில் வேலைவாய்ப்பு ஆணைகள் வழங்கும் விழா!

ஏப். 07, 2025 9:48 முற்பகல் |

 

நெல்லை வண்ணார்ப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் 2024-25-ஆம் கல்வி ஆண்டில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு 804 பணி நியமன ஆணைகள் வழங்கும் வெள்ளி விழா ஆண்டின் ஜுபிளண்ட் விழா பெற்றோர்கள் முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற்றது   இதில் வேலைவாய்ப்பு ஆணைகளை நிறுவனர் கிளிட்டஸ் பாபு வழங்கினார். 

இந்த விழாவுக்கு நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். விழாவில் பேசிய நிறுவனர் கிளிட்டஸ் பாபு, இந்த ஆண்டு கல்லூரியில் 100 சதவீத வேலைவாய்ப்பை பெற்று கல்லூரிக்கு பெரும்சுமை சேர்த்த மாணவர்களை பாராட்டுகிறேன். நீங்கள் உங்களது திறமையை வளர்த்துக்கொண்டு பணியாற்றும் நிறுவனங்கள் பாராட்டும்படி நடந்துகொள்ள வேண்டும். குழுவாக பணியாற்றி உயர வேண்டும். உங்களது வெற்றிக்கு பெற்றோர்களும், உங்களுக்காக அர்பணித்துக்கொண்ட பேராசிரியர்களும் முக்கிய காரணம்.   நீங்கள் கடினமாக உழைத்து, சுயமாக கற்றுக்கொண்டு வெற்றிபெற்றுள்ளீர்கள். நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். உங்களது வெற்றிக்கு பின்னால் பெற்றோர்களின் தியாகம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான்கென்னடி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு டிசி.எஸ். சி.டிஎஸ். இன்போசிஸ் , கார் டெக்னாலஜி. டெல்பி டிவிஎஸ், டூரிங் என்டர் ப்ரைசெஸ் , போகஸ் கல்ப் ஐடி. சொலுஷன்ஸ், டெல்ட்டாக்ஸ், கார்ட்ராப்பிட்,   விண்ட்ரோனிக்ஸ்,  நியூகர்  கம்முவால்ட், ஸ்கில் ரேங்க், விசை லேப் மற்றும் பல முன்னணி நிறுவனங்களில் இருந்து 804 பணி நியமன ஆணைகளை இறுதியாண்டு மாணவ மாணவியருக்கு நிறுவனர் கிளிட்டஸ் பாபு வழங்கினார். அவர்களது பெற்றோர்களுக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். வேலைவாய்ப்புப்  பெற்ற மாணவர்கள் ஆண்டு வருமானம் அதிகபட்சமாக ரூ 17.5 லட்சம் வரை பெற்றுள்ளனர். 

முன்னதாக செய்தியாளர் சந்திப்பில், கல்லூரியின் சாதனைகளை அவர் பட்டியலிட்டு பேசினார். இந்நிகழ்வில் அனைத்து ஸ்காட் கல்வி குழுமத்திற்கும் பொதுமேலாளர் (வளர்ச்சி) ஜார்ஜ் கிளிங்டன், பொதுமேலாளர் (நிர்வாகம்) கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர்கள்  ஜான்கென்னடி, முகமது சாதிக், தொழில்முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன், வேலைவாய்ப்பு துறை இயக்குநர் அன்னப்பாண்டி, திறன் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பொன்னு கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வளாக மேலாளர் சகரியா கேப்ரியல் செய்திருந்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement