சதுரகிரி மலை கோவில்: பக்தர்கள் செல்ல தடை
வத்திராயிருப்பு பகுதியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததால், அருகிலுள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களால் இன்று (ஏப்ரல் 7) மட்டும் சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி மறுத்தது.
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சில நிபந்தனைகளுடன் பக்தர்கள் நாள்தோறும் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கியது. எனினும், இந்த தகவல் பொதுமக்களுக்கு பெரிதளவில் தெரியவில்லை. மேலும், தொடர் மழையால் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, மலையேறும் அனுமதி வழங்கப்படவில்லை.இரண்டு தினங்களுக்கு முன்பு பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வத்திராயிருப்பு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், அருகிலுள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களால் இன்று (ஏப்ரல் 7) மட்டும் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி மறுத்தது.இதன் காரணமாக, தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் முன்பாக சதுரகிரி மலையில் சாமி தரிசனம் செய்வதற்காக காத்திருந்த பக்தர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கருத்துக்கள்