advertisement

பெரியநெசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா கோலாகலம்.

ஏப். 07, 2025 10:58 முற்பகல் |

 

கடலூர் மாவட்டம். நல்லூர் ஒன்றியம் பெரியநெசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின்
ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

விழாவிற்கு, பள்ளி பொறுப்பு தலைமையாசிரியை இரா. பத்மஸ்ரீ தலைமை தாங்கினார். விழாவில், குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விளையாட்டு போட்டி, கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட வட்டார கல்வி அலுவலர் நளினி. ஆசிரியர் பயிற்றுனர் செல்ல முருகன்,ஓய்வு பெற்ற ஆசிரியர் இராஜகோபால். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மன்னாங்கட்டி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

விழாவில்,சமூக- விளையாட்டு ஆர்வலர்கள்.பெற்றோர். பொதுமக்கள், பள்ளி ஆசிரியைகள், மாணவர் - மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி பொறுப்பு தலைமையாசிரியை இரா. பத்மஸ்ரீ தலைமையில் சிறப்பாக செய்து இருந்தனர்.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement