தூத்துக்குடியில் ஏப் 2 ல் நீதிமன்ற புறக்கணிப்பு குறித்த கூட்டம்
தூத்துக்குடியில் ஏப் 2 ல் நீதிமன்ற புறக்கணிப்பு குறித்த கூட்டம் நடைபெறுகிறது
நமது சங்கத்தின் 01.04.2025 செவ்வாய்க்கிழமை பொதுக்குழு தீர்மானத்தின் படி நாளை 02.04.2025 புதன்கிழமை முதல் 05.04.2025 சனிக்கிழமை வரை நீதிமன்ற புறக்கணிப்பும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நாளை 02.04.2025 புதன்கிழமை நண்பகல் 1 மணிக்கு மீண்டும் பொதுக்குழு கூட்டம் சங்கத்தில் வைத்து நடைபெறுகிறது. சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தின் பொருளாக தூத்துக்குடி டவுண் ஏஎஸ்பி.,மதன் மற்றும் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் ஆகியோர் வழக்கறிஞர்கள் தொழிலுக்கு எதிராக செயல்பட்டு வருவது குறித்து மீண்டும் விவாதித்து முடிவு செய்யப்படவுள்ளது. மேற்கண்ட தகவலை தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் மற்றும் செயலாளர் அறிவித்துள்ளனர்.
கருத்துக்கள்