குற்றால அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது தற்போது தண்ணீர் வரத்து சீராகி உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது அதில் ஒன்றாக தென்காசி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு குற்றால அருவிகள் தண்ணீர் ஆர்பரித்து கொட்டியது அதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த 20 ஆம் தேதி தண்ணீர் ஆர்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது, மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் என்பதினால் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சென்று வரும் நிலையில் குற்றாலத்திலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்படுகின்றன.மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்தால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளின் கூட்டம் தற்போது அதிகரித்து காணப்படுவதினால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பாக குளிக்க வேண்டும் எனவும் போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்