advertisement

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நவ. 22, 2024 5:30 முற்பகல் |

 

கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்நேற்று இரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆறுகள், நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், நீர் நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement