advertisement

ஓசூர் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் ஆனந்தின் மனைவியும் கைது..!

நவ. 21, 2024 9:20 முற்பகல் |

 

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் ஆனந்தன் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மூத்த வழக்கறிஞரான சத்யநாராயணன் என்பவரிடம் கண்ணன் (30) பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அதேபோல அங்கு சத்யாவதி என்ற பெண்ணும் பயிற்சி வழக்கறிஞராக உள்ளார்.

இந்த நிலையில், கண்ணனுக்கும், சத்யாவதியின் கணவர் ஆனந்திற்கும் இடையே முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு கைகலப்பாகவும் மாறி இருந்தது. இந்த நிலையில் தான், கண்ணன் நேற்று மாலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு வெளியே வரும் போது, கண்ணனை வழி மறித்த ஆனந்த் அவரை அரிவாளால் சரமாரியாக கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார்.இதில், ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து விழுந்த கண்ணன் உயிருக்காக போராடி கொண்டிருந்தார். அது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. தற்போது ஆபத்தான நிலையில் கண்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கண்ணனை வெட்டிவிட்டு தப்பிய ஆனந்த் நேற்று நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில், அவரது மனைவி சத்யாவதியையும் காவல்துறை கைது செய்துள்ளது. சத்யாவதியிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலை முயற்சிக்கு அவரும் உடந்தையாக இருந்ததாக கூறி போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேற்கொண்டு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement