பரமக்குடி ஸ்ரீமுத்தால பரமேஸ்வரியம்மன் கோவில் பங்குனித்திருவிழா கொடியேற்றம்
பரமக்குடி ஸ்ரீமுத்தால பரமேஸ்வரியம்மன் கோவிலில் 11 நாள் பங்குனித்திருவிழா. காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரின் மத்தியில், நகர் மக்களின் காவல் தெய்வமென அனைத்து சமுதாய மக்களால் போற்றப்படும் ஸ்ரீமுத்தால பரமேஸ்வரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா 11 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது நடைமுறை பழக்கம்.அதனடிப்படையில், கோவிலின் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு 02 -ந் தேதி (புதன்) இரவு காப்பு கட்டுதல் நிகழ்வும், 03 -ந் தேதி (வியாழன்) காலை 10.46 மணிக்கு கொடியேற்றப்பட்டு சந்தனம்,பன்னீர் பால் உள்பட பல்வேறு விசேஷ அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு வெயில் மறைந்து வானம் மந்தமாக இருந்து மக்கள் மனதை குளிர்ச்சிப்படுத்தியது.
தொடர்ந்து, முதல் நாள் திருவிழா தொடங்கியது.04 - ந் தேதி (வெள்ளி) பாரதிநகர் ஆயிர வைசியர் நலச்சங்கம் சார்பிலும், 06 -ந் தேதி (ஞாயிறு) பரமக்குடி வன்னியகுல க்ஷத்திரிய மகாசபை சார்பில் வண்டி மாகாளி வேஷத்துடனும், இரவு சூரசம்ஹார நிகழ்வும் நடைபெறும். 09-ந் தேதி (புதன்) எமனேஸ்வரம் உப்பு மகிமை அ.ஷேக்தாவூது ராவுத்தர் வகையறா மண்டகப்படி சார்பிலும் ,10 - ந் தேதி (வியாழன்) ஆயிரவைசிய பஞ்சுக்கார மண்டகப்படி, த.பெ.மு.அ.பாலுச்சாமி பரம்பரை பூர்விக டிரஸ்டி சார்பிலும்,
11-ந் தேதி (வெள்ளி) 9-ம் திருவிழாவாக விடியற்காலை முதல் மாலை வரை அக்னிச்சட்டி ஊர்வல பெருவிழாவும்,இரவு சிறப்பு நிகழ்வாக மின்சார தீப அலங்காரத்துடன் தேரோட்டமும்,
12-ந் தேதி (சனி) விடியற்காலை பல வர்ண மலர்களால் சூழப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் கள்ளழகர் வேடம் பூண்டு வைகையாற்றில் இறங்கும் நிகழ்வும்,திருவிழாவின் முத்தாய்ப்பாக, 13 - ந் தேதி (ஞாயிறு) விடியற்காலை முதல் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து அம்பாளுக்கு செலுத்தி வழிபடுவர்.
திருவிழா நடைபெறும் 11- நாட்களும் காலை, மாலை அம்மன் பூதகி வாகனம், வெள்ளி சிங்கம், கேடயம், பல்லக்கு, கிளி, காமதேனு, குதிரை , பூப்பல்லக்கு உள்பட பல்வேறு வாகனங்களில் வீற்றிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலிப்பார்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆயிரவைசிய சபை தலைவர் ராசி என். போஸ், துணைத் தலைவர் எஸ்.பாலுச்சாமி, செயலாளர்கள் வி.எஸ்.என்.செல்வராஜ், எஸ்.கே.பி. இலெனின்குமார், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வராள், ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் டிரஸ்டிகள் அம்பலம் மு. வ.பா.ஜெயராமன், த.அ.செ.ஸ்ரீ.வா. ரவீந்திரன், மேனேஜிங் டிரஸ்டி ந.அ.சி.ந.சோ.பாலசுப்பிரமணியன் உள்பட மண்டகப்படி உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.திருவிழாவயொட்டி கோவில் வளாகம் உள்பட நகரமே விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்