advertisement

'டீக்கடையில் மோதல்'-பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் மீது புகார்

ஏப். 04, 2025 4:18 முற்பகல் |

 


பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தாக்கியதாக உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தர்ஷன். முகப்பேர் கிழக்குப் பகுதியில் இவர் குடியிருக்கும் வீட்டிற்கு அருகே டீக்கடையில் காரை பார்க் செய்துவிட்டு டீ குடிக்க சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது மற்றொரு தரப்பு இளைஞர்களுக்கு இடையே காரை பார்க் செய்வதில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பிக்பாஸ் தர்ஷன் சிலரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தாக்கப்பட்டவர் நீதிபதியின் மகன் என்பது தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான மகேஸ்வரி மற்றும் நீதிபதியின் மகன் ஆதிசுடி உள்ளிட்ட இருவரும் ஜேஜே நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.   புகாரைத் தொடர்ந்து தர்ஷனிடம் ஜெஜெ நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல் தர்ஷன் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறதாகவும் கூறப்படுகிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement