advertisement

தூத்துக்குடியில் மக்கள்டெய்லி செய்தி தளத்தின் 4வது ஆண்டு துவக்க நாள் விழா

ஏப். 16, 2025 5:31 முற்பகல் |

தூத்துக்குடியில் மக்கள் டெய்லி செய்தி தளத்தின் 4வது ஆண்டு துவக்க நாள் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி பாளை.,ரோட்டில் உள்ள பானு பிருந்தாவன் கிரின்பார்க் ஹோட்டலில் வைத்து மக்கள் டெய்லி செய்தி தளத்தின் 4வது ஆண்டு துவக்க நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் செங்குட்டுவன், மற்றும் வழக்கறிஞர்கள் கிஸ்ஸிங்கர் அசோக்,ராஜேந்திரன்,பாலா, ஆகியோரும் மருத்துவர்கள், அனிஷ், கோபிகா, ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம், மூத்த பத்திரிகையாளர் ஞானதுரை,திரைப்பட இயக்குனரும்,கர்நாடகா மாநில தமிழ்நாடு நடிகர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன். தொழிலபதிபர்கள் சுகுமார்,பேச்சிமுத்து, ஆனந்தமூர்த்தி,கருப்பசாமி,சரவணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்று வரவேற்புரை மற்றும் தொகுப்புரை ஆத்தூர் மணி குரூப் குழும ஹோட்டல்களின் நிர்வாக இயக்குனர் தமிழ்செல்வன் தொகுத்து வழங்கினார். மக்கள்டெய்லி செய்தி குழுமத்தின் சிஇஓ.,சங்கர் ஏற்புரை நிகழ்த்தினார். இதில் மக்கள் டெய்லி செய்தி தளத்தின் துவக்கத்தின் போது நடந்த சுவையான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.நன்றியுரையை மருத்துவர் ஜேம்ஸ்சுந்தர்சிங் நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மக்கள் டெய்லி செய்தி தளத்தின் அலுவலக ஊழியர்கள் ,மனிதவள மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
  • எட்வின் ஏப். 16, 2025 7:55 முற்பகல்
    உண்மை செய்தி வழங்கு மக்கள் டெய்லி செய்தி பாருங்க வாசியுங்க மக்களுக்கு சொல்லுங்க நல்லது
    0 0
advertisement
advertisement