advertisement

கன்னியாகுமரி ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை.. நேரில் பாராட்டிய எஸ்பி.,

ஏப். 16, 2025 3:14 முற்பகல் |


 

குளச்சல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஒட்டி வரும் காமராஜர் சாலையை சேர்ந்த அன்வர்சாதிக் என்பவர் ஆட்டோவில்  பீச்ரோட்டில் சவாரி எடுத்துள்ளார். 

ஆட்டோவில் ஏறிய வாணியக் குடியை சேர்ந்த ஹெலன் இறங்கும் போது கவரில் வைத்திருந்த 2.67 லட்சம் பணத்தை ஆட்டோவில் தவற விட்டுள்ளார். இதை கவனித்த அன்வர்சாதிக் பணத்தை பத்திரமாக எடுத்து  குளச்சல் காவல் நிலைய உதவிஆய்வாளர் தனிஷ்லியோனிடம் ஒப்படைத்தார்.

காவல் துறையினர் மேற்படி உரிமையாளரை கண்டுபிடித்து பணத்தை ஒப்படைத்தனர்.ஆட்டோ ஓட்டுநர்  அன்வர்சாதிக்கின் நேர்மையை பாராட்டி மேலும் அவரை ஊக்குவிக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்   ஸ்டாலின் அன்வர் சாதிக்கை நேரில் அழைத்து நேர்மையை பாராட்டி கௌரவித்தார்கள்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement