பரமக்குடியில் 17 - ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
பரமக்குடி வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 17 - ந் தேதி நடைபெறுகிறது என பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் தகவல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் தலைமையில் பரமக்குடி வருவாய் கோட்ட அளவில் உள்ள விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகின்ற 17.04.2025. வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கூட்டத்தில், விவசாயிகளும், சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த கோரிக்கைகள், குறைகளை தெரிவித்து பயன்பெறலாமென பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்