சாலை விபத்தில் சிக்கிய திமுக நிர்வாகியிடம் உடல் நலம் விசாரிப்பு
ஏப். 16, 2025 3:47 முற்பகல் |
சாலை விபத்தில் சிக்கிய திமுக நிர்வாகியிடம் புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளர் உடல் நலம் விசாரித்தார்.
திமுகவை சேர்ந்த முன்னாள் கழக பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட விவசாய அணி தலைவர்
மழையூர் இராமசாமி சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று தற்போது உடல்நலம் பெற்று கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் செவல்ப்பட்டி கிராமத்தில் ஓய்வெடுத்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளர் ராஜேஷ் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். உடன் வட்ட கழக செயலாளர் கண்மணி சுப்பு, கார் கணேசன், ராகவன் ஆதிமூலம், இராஜ கோபாலபுரம் செந்தில், சரத் மற்றும் செவல்பட்டி திமுக கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கருத்துக்கள்