நெல்லையில் மாணவனை வெட்டிய சம்பவம் சக மாணவனுக்கு நீதிமன்றக் காவல்
ஏப். 16, 2025 3:05 முற்பகல் |
நெல்லையில் மாணவனை வெட்டிய சம்பவத்தில் சக மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் தனியார் பள்ளி வகுப்பறையில் எட்டாம் வகுப்பு மாணவனை வெட்டிய சக மாணவன் கைது செய்யப்பட்டு, நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவர் சீர்திருத்த குழுமத்தில் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து வரும் 29ஆம் தேதி வரை 14 நாட்கள் அவரை சீர்திருத்த குழுமத்தில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தகுதியான நபர்களைக் கொண்டு மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்