திருக்குறள் செம்மல் மணிமொழியாளர் வாழ்நாள் சாதனையாளர் கருத்தரங்கம்
திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் வாழ்நாள் சாதனையாளர் கருத்தரங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு கலை, பண்பாட்டு அணியினர் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆயிர வைசிய ஜவுளி வியாபாரிகள் கல்யாண மஹாலில் திருக்குறள் செம்மல் ந.மணிமொழியாளர் வாழ்நாள் சாதனையாளர் கருத்தரங்கம் நடத்தி அவருக்கு புகழாரம் சூட்டினர்.
நிகழ்விற்கு, அமைப்பின் மாநில துணை பொதுச் செயலாளரும், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் அம்பலம் ஆர்.இரமேஷ் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பி.எஸ்.பாண்டியராஜன், அமைப்பின் கலை, பண்பாட்டு அணி மாநில துணை அமைப்பாளர், ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் கே.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் மாநில தகவல் - தொழில் நுட்பப் பிரிவு அமைப்பாளர் பா.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியில், மணிமொழியாளர் உருவப் படத்திற்கு மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் இயக்குநர் கார்த்திக் மணிமொழியன் உள்பட சிறப்பு அழைப்பாளர்கள் மலர் மாலை தூவி மரியாதை செய்தனர்.
தகப்பனார் திருக்குறள் செம்மல் ந. மணிமொழியனார் ஆற்றிய தொண்டுகளை கார்த்திக் மணிமொழியன் நினைவு கூர்ந்து பட்டியலிட்டு புகழாரம் சூட்டினார்.தொடர்ந்து, அவரது நினைவை போற்றும் வகையில் குழந்தைகளை திருக்குறள் சொல்லச் சொல்லி குழந்தைகளுக்கு திருக்குறள் பரிசாக அளிக்கப்பட்டது.
மேலும், பெண்கள், ஆண்களுக்கு சேலை, வேஷ்டி நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ முருகேசன், நகர்மன்ற தலைவர் சேது. கருணாநிதி, புதுச்சேரி தமிழ் இலக்கிய ஆய்வுக் கழகம் தலைவரும், புதுச்சேரி அரசு தமிழ் மாமணி முனைவர் சு.வேல்முருகன், மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் நிர்வாக பங்குதாரர் கமலா மணிமொழியன், தினசரி நாளிதழ் ஆசிரியர் டாக்டர் அ.முகமது அலி ஜின்னா, தமிழ்நாடு ஆயிர வைசியர் சங்கம் எஸ்.அருண்மோகன், நெறிஞ்சிப்பேட்டை ராமநாதபுரம் மாவட்ட அறங்காவலர் வழக்கறிஞர் பி.என். செந்தில்குமார் உள்பட ஆன்றோர்கள், சான்றோர்கள் திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் தனது வாழ்நாளில் மக்களுக்கும், ஆன்மீகப் பணிகளுக்கும் ஆற்றிய தொண்டுகளை விளக்கமாக பட்டியலிட்டு கூறி அவருக்கு புகழாரம் சேர்த்தனர்.
நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட முன்னாள் பொருளாளர் ஏ.பி.முத்தரசன், பரமக்குடி ஆயிர வைசிய சபை செயலாளர் வி.எஸ்.என்.செல்வராஜ், அங்காள பரமேஸ்வரி கோவில் டிரஸ்டி எஸ்.ஜீவானந்தம், ஆயிர வைசிய சபை துணைத் தலைவர் ஏ.ஆர்.சுப்பிரமணியன், ஆயிர வைசிய சபை கெளரவ செயலாளர் ஜெபிஎஸ் . மணிவண்ணன், ஏபி.மனோகர், ஏபிஎம்.இளையராஜா, ஏ.பி.மகாதேவன் உள்பட ஆயிர வைசிய சபையினர்கள், வியாபாரிகள், நகர் முக்கிய பிரமுகர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.வி. சங்கர் நன்றி கூறினார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்