ஆவடி அருகே 21 மாடி டைடல் பார்க் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராமில் 330 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த டைடல் பார்க் தொழில்நுட்பப் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
பட்டாபிராம் டைடல் பார்க் திறக்கப்பட்டது குறித்து தமது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2000ம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி திறந்து வைத்த ஓஎம்ஆர் டைடல் பூங்காவால், தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டதாகவும், தற்போது ஆவடியில் அமைந்திருக்கும் 21 மாடி டைடல் பூங்கா நகரின் வடக்கு பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 2 மற்றும் 3ம் நிலை நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள நியோ டைல் பூங்காக்களுடன் இது போன்ற புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திராவிட மாடல் அரசின் தொலைநோக்குப்பார்வையை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்