இந்தி மொழியில் மாறிவிட்டதா எல்ஐசி தளம் ? இணையத்தில் வெடித்த புதிய சர்ச்சை!
நவ. 19, 2024 6:27 முற்பகல் |
மத்திய அரசின் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளப் பக்கம் திடீரென இந்தி மொழிக்கு மாறிவிட்டதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது எல்.ஐ.சி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம். இதன் வெப்சைட் ஆங்கிலம், இந்தி, மராத்தி என மூன்று மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல்முறை https://licindia.in/ என்ற லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்லும் போது அனைவருக்கும் எளிதில் விளங்கும் வகையில் ஆங்கில மொழியில் தான் அனைத்து விஷயங்களும் இடம்பெற்றிருக்கும். இதனை டிஃபால்ட் மொழி என்கின்றனர்.
தேவை ஏற்படும் மற்ற இரண்டு மொழிகளை தேர்வு செய்து கொள்ளலாம். இந்நிலையில் எல்.ஐ.சி வெப்சைட் டிஃபால்ட்டாக இந்தி மொழிக்கு மாறிவிட்டதாக கூறுகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் காரசாரமாக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
கருத்துக்கள்