advertisement

தேசியவாத காங்கிரஸ் கட்சி பாபா சித்திக் துப்பாக்கியால் சுட்டு கொலை

அக். 13, 2024 9:47 முற்பகல் |

அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பாபா சித்திக் கொல்லப்பட்டது குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மும்பை பாந்த்ரா கிழக்கு பகுதியில் நேற்று தமது மகன் ஜீஷான் சித்திக் அலுவலகம் அருகே நின்ற போது பாபா சித்திக் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாபா சித்திக் கொலை வழக்கு குறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள்," குண்டு துளைக்காத காரில் பாபா சித்திக் பயன்படுத்தி வந்தார். எனவே, அவர் மீது துப்பாக்கியால் சுட்டவர்கள் குண்டு துளைக்காத காரையும் துளைக்கூடிய அதிநவீன துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். மிகவும் நெருக்கமாக அவரை சுட்டுள்ளனர். அவரை சுட்ட மூன்று நபர்கள் கைகுட்டையால் தங்களது முகத்தை மறைத்திருந்திருந்தனர். அவர்களில் இரண்டு பேரை அங்கிருந்த பாபா சித்திக் ஆதரவாளர் துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து 13 ரவுண்ட்கள் சுடக்கூடிய துப்பாக்கி ஒன்றையும் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே,, "விரைவு நீதிமன்றத்தில் பாபா சித்திக் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும். இந்த வழக்கை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக் விசாரணை மேற்கொள்வார். மும்பை போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளனர். யார் ஒருவரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடாது. ரவுடிகளுக்குள் மோதல் என்பது திரும்பவும் வராது. இது போன்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,"என்றார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement