கிராம சபை தீர்மானம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் பேசும் ஆடியோவால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம சபை தீர்மானம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் பேசும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தீர்மானம் ஏற்றபட்டுள்ளதா என கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் வார்டு உறுப்பினர்கள் ,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் கடந்த நவம்பர் 21/11/2024 அன்று செந்தியம்பலம் ஆரம்ப பள்ளியில் வைத்து கிராமசபை கூட்டம் நடைபெற்றது.இதில் ஊர் பொதுமக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் முன்மொழிந்து வார்டு உறுப்பினர்கள் சார்பில் சுமார் 25 தீர்மானங்கள் எதிர்கால சேர்வைக்காரன்மடம் ஊராட்சி நலனை கருத்தில் கொண்டு 1)cwss 90 habitations scheme 12 வருடமாக செயல்பட்டும் ஆற்று தண்ணீர் வீட்டு இணைப்புக்கு வழங்கபடவில்லை. ஆற்றுகுடி நீர் வீட்டு இணைப்புக்கு வழங்க 2) பேய்குளம் குளம் தூர்வார 24 கோடியில் துறையால் நடவடிக்கை எடுக்க உயர் அலுவலர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டு உள்ளது கிடப்பில் உள்ள பேய்குளம் குளம் தூர் வார ,3) ஊராட்சி வழியாக செல்லும் சாலையை அகலப்படுத்த 4) அரசு விதிகளின்படி மின்கம்பங்கள் கடந்த காலங்களில் அமைக்கப்படவில்லை அதை கண்டறிந்து விதிப்படி மின் கம்பங்கள் அமைக்க 5) அரசு தரிசு ஏர்போர்ட் அருகே உள்ள இடங்களில் சர்வதேச விளையாட்டு அரங்கம் அமைக்க 6) அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க 7) செந்தியம்பலம் மற்றும் சிவஞான புரத்தில் மேல்நிலைத் தேக்க தண்ணீர் தொட்டி அமைக்க 8) ஊராட்சியில் முறையான எந்த அனுமதியும் வாங்காமல் ,மக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் மதுபானக்கடை எண் 10144 ,எளிய மக்களுக்கு அரசு இலவசமாக இடம் அளித்த கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரைக்கொண்ட காமராஜர் நகரில் ஊர் பெண்கள் கழிப்பிடத்திற்கு அருகாமையிலும் மேலும் ஒன்றியத்திலுள் ஊராட்சிகளுக்கு மரம் செடி விநியோகம் செய்யப்படும் விரிவுபடுத்த பல பெண்கள் வேலை செய்யும் நர்சரி அருகேயும் பஸ் வசதி இல்லாத 50 குடும்பங்கள் குடியிருக்கு நம்மாழ்வார் நகர் மக்கள் பயணிக்கும் பகுதியிலும் சுமார் 200 பெண்கள் வேலை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு அருகாமையிலும், பாலி டெக்னிக் கல்லூரி அருகிலும் கடந்த அரசால் அமைக்கப்பட்டது.
இது அமைப்பதற்கு முன்பே கடந்த ஜனவரி 2020 கிராமசபையில்கடை அமைக்க கூடாது என தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.மேலும் பொதுமக்கள் அளித்த மனுவுக்கு கடை அமைக்கப்படாது என கூறி ஏமாற்றி அதையும் மீறி கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டது. இது ஊராட்சியில் அமைக்கப்பட்ட இரண்டாவது டாஸ்மாக் கடையாகும். கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் இந்த பகுதியில் நடந்து வருகிறது.பாரில் முறைகேடாக சில்லறை விற்பனை நடந்து வருகிறது என காவல்துறையால் பார் ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் ஆகவே FIR 15/2024 போடப்பட்டுள்ளது.கடந்த மாதத்தில் கூட பொதுமக்களுக்கு இடையூராக பிரச்சனை நடைப்பெற்றதால் ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்கு உள்ளது.மேலும் கடந்த வருடத்தில் இந்த கட்டிடத்திலேயே ஒரு குற்றச்செயல் நடைபெற்று fir no 164/2023 பதிவு செய்யப்பட்டுள்ளது.பலமுறை இந்த கடையை அகற்ற பொதுமக்களால் மனு அளிக்கப்பட்டு வருகிறது .எனவே பொதுமக்களின் கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கும் விதமாய் கிராமசபையில் இந்த கடையை அகற்ற வார்டு உறுப்பினர்கள் சார்பாகவும் கோரிக்கை வைத்து தீர்மானம் இயற்ற மனு அளித்து அது வார்டு உறுப்பினர்களால் வழங்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொதுமக்களுக்கு இடையூராக உள்ள மதுபானக் கடையை கடந்த வருடம் அகற்றியது.
இந்நிலையில் தமிழக அரசு தலைமை செயலர் கடந்த கிராம சபைகளில் "கிராமமக்கள் சொல்லும் தீர்மானம் பஞ்சாயத்து தலைவரும் அதிகாரியோ நிராகரிக்க முடியாது.தீர்மானம் சரி அல்லது தவறு என்று முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கும் மட்டுமே உள்ளது என சுற்றறிக்கை அனுப்பி எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வந்தது.இந்நிலை யில் ஊராட்சி மன்ற கணவரிடம் ஒரு இணை ஆசிரியர் இந்த தீர்மானத்தை பற்றி இருவரும் பேசிய அதிர்ச்சி ஆடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது.இதில் ஊராட்சி தலைவர் கணவர் அரசுக்கு எதிரான தீர்மானம் இதை ஏற்க முடியாது என்றும் நான் ஊராட்சி செயலரிடம் வார்டு உறுப்பினர்கள் கேட்டால் இயற்ற முடியாது என கூறி எழுதிவிடு என அரசு அதிகாரியான ஊராட்சி செயலாளரை கட்டுப்படுத்துவது போல உள்ளது. தமிழகத்தில் பெண் ஊராட்சி தலைவர் கணவர் தலையீடு இருக்கக்கூடாது என கூறி தலையீடு இருக்கும் இடங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இப்போது நடைபெற்ற கிராமசபையில் இயற்றிய தீர்மானத்தை வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றும் நிலையை இந்த ஆடியோ உணர்த்தியுள்ளது.
உண்மைதன்மையை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் .பொதுமக்கள் கொடுத்த 10144 டாஸ்மாக் கடை அகற்ற என்பது உட்பட அனைத்து தீர்மானத்தையும் நிறைவேற்றபட்டுள்ளதா என மாவட்ட ஆட்சியர் கண்காணித்து மக்கள் ஜனநாயகம் ஆகிய கிராம சபையின் மாண்பை போற்ற வேண்டும் என சேர்வைக்காரன்மட்ம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ,சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர். மனுவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாண்புமிகு முதல்வர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.இது இப்பகுதியை அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது
கருத்துக்கள்