ஆறு மணி நேரம் ஒரே இடத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்து என்ன?
ஃபெங்கல் புயல் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றே புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் புயல் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 6 மணி நேரமாக ஃபெங்கல் புயல் நகராமல் ஒரே இடத்தில் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என்றும் பின்னர் வடக்கு வட மேற்கு திசையில் நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் என்றும் தெரிவித்துள்ள வானிலை மையம் வரும் 30ஆம் தேதி காரைக்கால் - மாமல்லபுரம் இடையே இது கரையை கடக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி காரைக்கால் கடற்கரைகளிலும் பலத்த தரைக் காற்று வேகமாக வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கருத்துக்கள்